முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அவருக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 490 இலங்கை அகதிகளை ஏற்றிய எம் வி சண் சீ கப்பல் தற்போது பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய கோலாம்பூரில் 111 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 75 இலங்கை அகதிகளில் 62 பேர் இன்று நண்பகல் குடிவரவு திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டார்கள்.
சுமார் 500 இலங்கையர்கள் இருக்கலாம் என நம்பப்படும் எச் வி சன் சீ கப்பலுக்குள் கனேடிய கரையோர காவல்படையினர் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற சர்வதேச இளைஞர் தின விழாவில் கலந்துகொள்ளச் சென்ற வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்கள் உட்செல்ல அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக அவ்விளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு எதிராக நேரடி போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள எதிர்ப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில் அவற்றை பகுதிப்பகுதியாக விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தொடர்பிலான யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறி மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் கெடு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மனோ கணேசனின் ஒப்புதலுடன் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், பிரபா கணேசனுக்கு அதிகாரப்பூர்வமாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் சுமார் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் செயற்படுவதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரவியல் பணியகம் தெரிவித்துள்ளது.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு ஒஸ்லோவில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், மோதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.