இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த விடயங்களைக் கையாள்வதற்காக சர்வதேச குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும் ஜனநாயக செயற்பாட்டுக்கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் பி.ராமசாமி துரிதப்படுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர் தம்வசம் வைத்திருப்பதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர்.
இவ்வாறு பாதிக்கப் பட்டுள்ள சிறுவர்கள் போதிய வைத்திய வசதிகள் இன்மையால் கவனிப்பாரற்ற நிலையில் விடப்பட்டுள்ளனர். குறிப்பாக தோல்சார் நோய்களே அதிகமாகக் காணப்படுகின்றது.
அவசர நிலைமைகளில் வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது
ஐக்கிய தேசியக்கட்சியின் நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் சிங்கள மக்களை குடியேற்றக் கோரி பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரதண தேரர் தலைமையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பில் சிங்கள மக்களை குடியேற்றக் கோரி பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரதண தேரர் தலைமையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் அனுராதபுர சிறைக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பிரதி அமைச்சர் மேவின் சில்வா, அரச பணியாளரான சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரம் ஒன்றில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியான களனி பிரதேச சபை மைதானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடக்கில் இதுவரை சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கேயே நிரந்தரமாகக் குடியேற்றப்படுவர் என இராணுவத் தளபதி மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொண்ட யுத்தம் குற்றச் செயலாக கருதப்பட முடியாதென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி கய் பெட்டன் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.