கொழும்பில் பரிசோதனை செய்வதற்காக அனுப்பப்பட்ட தர்ஷிகாவின் உடல் உள்ளுறுப்புக்களில் முக்கிய உறுப்புக்கள் இல்லாதிருப்பதால் சோதனையை நடத்த முடியாதிருக்கிறது என்று கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ.அல்விஸ் தெரிவித்துள்ளார்.
கே பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் உள்ளுர் பத்திரிகை ஒன்று நடத்திய நேர்காணல் அண்மையில் பிரசுரமாகியிருந்தது. எனினும் அந்த பத்திரிகையில் வெளியாகாத நேர்காணல்கள் கீழே தரப்படுகின்றன
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் பெரும்பாலானோர் வாகன சாரதி தொழிலையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.
சுமார் 200 இலங்கையர்கள் இருப்பதாக கூறப்படும் எம்.வி சன் சீ கப்பலை இடைமறிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் உரிய தேவையான அக்கறை காட்டவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள கனிய வளங்களைச் சுவீகரித்து இலாபம் தேடுவதிலேயே அதிக அளவில் அக்கறை காட்டுகிறது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சாடினார்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக அரசாங்கம் பத்து குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
யுத்தம் நிலவிய காலத்தில் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டனர். அதேபோல் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் இவ்வாறு ஊடகங்களுக்கெதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்து விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
"எங்களை எங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யுங்கள் அல்லது எங்களைக் கொன்றுவிடுமாறு அரசாங்கத்திடம் கூறுங்கள்' இவ்வாறு சாந்தபுரம் மக்கள் கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாமல் வாழ்வது தாங்கிக் கொள்ளமுடியாததொன்று என்று தாய்மார் முறையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதியில் காத்தான்குடி நகர சபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய நில ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இன விரோத செயற்பாடுகளைக் கண்டித்தும்.....
தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டிற்கு உதவுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் கேட்டிருந்தோம். அந்தவகையில், கே.பி. வடக்கின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்திற்கும் உதவி வருகின்றார் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிரிஸ்மஸ் தீவுக்கடற்பரப்பில் வைத்து, நேற்று முன்நாள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.