வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடமிருந்து 17 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவல தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் போர்க்குற்றவாளி என அவர் கைது செய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்தார். லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 06.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் அமைப்புத்திருத்தம் சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கிடையில் நடத்தப்பட்டுவரும் பேச்சு வார்த்தைகளில் இருவரும் மூன்று விடயங்கள் தொடர்பில் இரகசியமான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு ஜூலை இனப்படுகொலைக்கு வித்திட்ட, 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மறைமுகமாக உதவினார் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகரியே தற்போதைய யாழ் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க எனத் தெரியவந்துள்ளது.
வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழர்களது காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நாம் அறிக்கை கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.